சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் முதல்வர் ஜோசப் விஜய், மெட்ரோ தலைமையகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இன்று பிற்பகலில் வந்த முதல்வர் விஜய், மெட்ரோ ரயிலில் நந்தனம் வரை பயணம் செய்தார்.
தொடர்ந்து, அங்கிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்ற முதல்வர் விஜய், அரசு அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள் விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.
இதையடுத்து சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா செல்லும் முதல்வர் விஜய், அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மெட்ரோ பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
தொடர்ந்து, கிண்டியிலிருந்து சாலை வழியாக போரூர் செல்லும் முதல்வர் விஜய், போரூர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஆளில்லா மெட்ரோ ரயிலில் பூந்தமல்லி வரை பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யவுள்ளார்.
Summary
Chief Minister Vijay inspects by traveling on the Chennai Metro train!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!
இவங்க தொல்லை தாங்க முடியல... மெட்ரோ ரயில் விதிகள் பேருந்திலும் கடைப்பிடிக்கப்படுமா?

சென்னை மெட்ரோவில் பயணிப்பவரா? இந்த தகவல் தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |


