தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோ

திருமாவளவனுக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்ற கருத்தைத் திரும்பப் பெறுவதாக வைகோ கூறியது குறித்து...

News image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:52 pm IST

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்ற கருத்தைத் திரும்பப் பெறுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தென்காசியில் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ பேசியதாவது, "தவெக அமைச்சரவையிலும் திமுக கூட்டணியிலும் பங்கெடுப்பதாகவும், தவெகவும் திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணிக்கு வர வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வட துருவமும் தென் துருவமும் ஒன்றுசேர முடியுமா? இந்த மாதிரி கருத்தைச் சொன்னதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொன்னேன். இதில் துன்புறுத்த வேண்டிய நோக்கமில்லை.

திருமாவளவன் அரசியலில் வளர வேண்டும் என்பதற்காக, என்னால் இயன்ற அத்தனை விதமான நிகழ்வுகளிலும் உதவியிருக்கிறேன். அவர் பெரிய தலைவராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பெரிய நட்சத்திரமாக வர வேண்டும் என்றும் 15 ஆண்டுகளாக அவருக்கு ஊக்கமளித்திருக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்கு பக்கபலமாகவும் இருந்துள்ளேன். எதிர்காலத்திலும் அப்படித்தான் இருப்பேன்.

இந்தச் சொற்களை நான் சொன்னதற்காக அவர் மனம் புண்பட்டிருக்குமேயானால், அவற்றை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். எழுச்சித் தமிழர் மீது எனக்கு இம்மியளவும் கசப்போ எதுவும் கிடையாது.

அவர் மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கே பயன் தரக்கூடிய வகையில் பணியாற்றி வருகிறார்.

அதிமுகவில் நானும் அவரும் கூட்டணியில் இருந்தபோது, என் சக்திக்கு மீறி, அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

Summary

MDMK Leader Vaiko has stated that he is withdrawing the view that VCK Cheif Thol. Thirumavalavan should be awarded the Nobel Prize

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.