ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ

திருப்பூரில் மதிமுக பொதுச்செயலர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி....

News image

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 1:56 pm IST

தவெக அரசுக்கு கவசமாக இருந்து பாதுகாப்பு அளிப்போம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பூர் புத்தரச்சல் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், 5 மாவட்டங்களில் இதுவரை சீமைக்கருவேல மரங்களை அகற்றி உள்ளோம். இம்மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. பறவைகள் ஆடுமாடுகள் இந்த செடி அருகே செல்வதில்லை. இந்த பேய் செடி கேரளத்தில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. பொது நல அமைப்புகள் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நியூட்ரினோ திட்டம், நீண்டகாலம் முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி உள்ளோம். வேறு எந்த கட்சிகளும் இவற்றுக்காக போராடவில்லை. மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் 28 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. இதனை ஊக்குவிப்பது மத்திய அரசு. தமிழகம் கொந்தளித்து எழும் வகையில் அன்புமணி நடைப்பயணத்தை நான் ஆதரிக்கிறேன். ஆர்லேகரை ஆளுநராக நியமித்து ஜனநாயக சித்து விளையாட்டை நடத்தி வருகிறது. குதிரைப் பேரம் என வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது.

எங்கள் கட்சியினரை திமுக சின்னத்தில் நிற்கவைத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டது தான் குதிரை பேரம். கட்டிங் , கரப்ஷனுக்கு(ஊழல்) முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு. ஊழலை வேருடன் பிடுங்கி எரியும் அரசாக உள்ளதால் நாங்கள் தவெகவை ஆதரிப்போம். நாங்கள் காவல் அரணாக போர்க்கவசமாக இருந்து விஜய் அரசுக்கு பாதுகாப்பு அளிப்போம் என சூளுரை தெரிவித்தார். கூட்டணியில் இருந்து பேசுவது சரியாக இருக்காது என்பதால்தான் பேசவில்லை.

ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தால் பாஜக ஆட்சியை கொண்டு வரலாம் என பகல் கனவு கண்டார்கள். அதனை முறியடித்துள்ளோம். தவெக ஆட்சியை அகற்ற தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆழ்ந்து யோசித்து ஒவ்வொன்றையும் கிரகித்து செயல்பட்டு வருகிறார். அடுத்த 6 மாதத்தில் அவர் திறமை வாய்ந்தவராக திகழ்வார். இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றார்.

Summary

MDMK General Secretary Vaiko has stated that they will stand as a shield and protect the TVK government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.