பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா? முதல்வர் விஜய்யை சந்தித்த வைகோ பதில்!

தவெக ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன், கெட்டது நடந்தால் எதிர்ப்பேன் என வைகோ தெரிவித்துள்ளது குறித்து...

vaiko press meet

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ - ANI

Published On :

கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஜூன் 17) தெரிவித்தார்.

தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் வைகோ பேசியதாவது:

''ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன்.

முதல்வர் விஜய் எளிமையுடன் இருக்கிறார், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறார். கமிஷன், கரப்ஷன் இன்ற சொற்களுக்கு இடமளிக்காமல் தவெக அரசு செயல்படுகிறது. ஊழல் இல்லாத ஆட்சியாக தவெக ஆட்சி உள்ளது'' எனக் கூறினார்.

மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, ''யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து பொதுக்குழு கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். மதிமுக உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் தெரியவரும். ஆட்சியில் நல்லது நடந்தால் வரவேற்பேன், கெட்டது நடந்தால் எதிர்ப்பேன்'' என வைகோ குறிப்பிட்டார்.

Summary

MDMK MLAs to resign Vaiko responds after meeting Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.