நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் குற்றப்பத்திரிகையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள சிபிஐ தரப்பில் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், விசாரணையை தில்லி விரைவு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வினாத்தாள் கசிவு வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்கை விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகாததால் புதன்கிழமைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, நீட் 2026 தோ்வு வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 360 சாட்சியங்கள், 422 ஆவணங்கள் மற்றும் 43 பொருள்களை இணைத்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கின் விசாரணை தொடங்கியபோது, குற்றப்பத்திரிகையுடன் சாட்சியங்களின் வாக்குமூலங்களோ அல்லது ஆவணங்களின் பட்டியலோ இணைக்கப்படவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தொடர்ந்து பதலளித்த சிபிஐ வழக்கறிஞர், அதிகளவிலான ஆவணங்கள் இருப்பதால் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாகவும், கூடுதல் அவகாசமும் கேட்கப்பட்டது.
இதையடுத்து, குற்றப்பத்திரிகையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள சிபிஐ தரப்புக்கு மேலும் 3 நாள்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Summary
NEET Question Paper Leak! CBI Seeks More Time from Fast-Track Court!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்!

அனைத்து மாவட்டங்களிலும்..! நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு!

நீட் வினாத்தாள் கசிவு! 21வது நாளாக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



