விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இப்படியே தொடர விட முடியாது! நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்

இப்படியே தொடர விட முடியாது என நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் - File photo

Published On :24 ஜூலை 2026, 2:50 pm IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை இப்படியே தொடர அனுமதிக்க முடியாது, இனி நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

நீட் இளநிலை நுழைவுத் தேர்வில் தொடர்ச்சியாக நிகழும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கூறிய உச்ச நீதிமன்றம், கணினி முறையில் நீட் தேர்வை நடத்தும் திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே ஆகியோரைக் கொண்ட அமர்வு, நீட் வினாத்தான் கசிவு சம்பவத்தைத் தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை இனி உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் தற்காலிக அல்லது அவசரக்கால நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கல்களைத்தான் ஏற்படுத்தி வருகின்றன என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

நீட் தேர்வை முற்றிலும் கணினி முறையில் மாற்றுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிவியுங்கள். கணினி முறையில் தேர்வு நடத்தப்படும்போது வினாத்தாள் கசியாமல் இருக்க எந்தவிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் கூறுங்கள். நிர்வாக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் இனி நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்கள் தொடர்புடைய இந்த விவகாரத்தில், மத்திய அரசு தனிக் கவனம் செலுத்துகிறது. நீதிமன்றத்தில், தங்களது முழு திட்டத்தையும் தெளிவுபடுத்த சில காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

இதை இப்படியே போக விட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.