தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடகம் செல்லவிருப்பதாக அமைச்சர் வினோத் தகவல் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல்வர் விஜய் - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் இருவரும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனை வேளாண் துறை அமைச்சர் வினோத் உறுதிப்படுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"காவிரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்ட விடமாட்டோம். அது நமது உரிமை. எனவே, அணை கட்டக் கூடாது என்பதற்காக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் கர்நாடகம் செல்கிறார். கர்நாடகத்தில் மழை இல்லை, அதனால் தண்ணீர் தர முடியாது என அவர்கள் தரப்பில் கூறி வருகிறார்கள். ஆனால், நமது உரிமையை முதல்வர் பெற்றுத் தருவார்" எனத் தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையே பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Summary
CM vijay goes to meet karnataka CM on aug 3 over mekedatu dam issue
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இழுபறியில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! தில்லி சென்றார் முதல்வர் சிவகுமார்!

கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்!

கர்நாடக அமைச்சரவை எப்போது விரிவாக்கம்? உறுப்பினர்கள் இடையே மீண்டும் போட்டி!

மேக்கேதாட்டு அணை: கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உதவும் - டி.கே. சிவகுமார்
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



