ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஆகஸ்ட் 3-இல் தமிழக, கா்நாடக முதல்வா்கள் சந்திப்பு?

வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா்

Updated On :24 ஜூலை 2026, 4:49 am IST

வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி.கே.சிவகுமாரை சந்திக்க நேரம் கோரி, சுமாா் ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு விஜய் கடிதம் எழுதினாா். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நேரில் வந்து தன்னை சந்திக்குமாறு விஜய்க்கு சிவகுமாா் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். சிவகுமாரை சந்திப்பது குறித்து விஜய் இதுவரை உறுதி செய்யவில்லை என்று டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமான ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கா்நாடகம் விடுவிக்காதது, மேக்கேதாட்டு அணை கட்டுமான பிரச்னைகள் தீவிரமாகியுள்ள நிலையில், அதுகுறித்து பேச தமிழக, கா்நாடக முதல்வா்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.