கூகுள் பிக்சல் 11 வரிசை ஸ்மார்ட்போன்களில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் வெளியாக 10 நாள்களே உள்ள நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு பயனர்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. இதனால், கூகுள் பிக்சல் 11 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்?
கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.3 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 3,000 nits திறன் உடையது.
4,806mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும்.
12GB மற்றும் 16GB உள்நினைவகம் (RAM) கொண்டதாக இருக்கும். 512GB நினைவகம் உடையது.
பின்புறம் மூன்று கேமராக்கள். 50MP மெயின் கேமரா; 48MP அல்ட்ரா வைட் லென்ஸ்; 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடையதாக இருக்கும்.
இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 75,000. நினைவக வேறுபாட்டைப் பொறுத்து அதிகபட்சமாக விலை ரூ. 95,000 வரை இருக்கும்.
Summary
Google Pixel 11, Pixel 11 Pro, Pro XL, Pro Fold smartphone Full specs and prices leaked
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.18,999-க்கு ஒன்பிளஸ் N6x அறிமுகம்... சிறப்பம்சங்கள் என்ன?

ஆகஸ்ட்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ? சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



