FOLLOW US

ON GOOGLE DISCOVER

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அமேசான் சுதந்திர தின சலுகை! என்னென்ன வாங்கலாம்?

அமேசானில் சுதந்திர தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள அதிரடி சலுகைகள் குறித்து...

News image

அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் - படம் / நன்றி - இன்ஸ்டாகிராம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:54 pm IST

அமேசானில் சுதந்திர தினத்தையொட்டி அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரேட் ஃப்ரீடம் திருவிழா எனப்படும் இச்சலுகை காலத்தில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினி, கையடக்கக் கணினி, மற்றும் மின்னணு பொருள்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சாம்சங், ஒன்பிளஸ், எச்.பி., ஹையர் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வங்கிக் கடன் அட்டை தள்ளுபடியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள மின்னணு பொருள்கள் மற்றும் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக்கொள்ள அரிய வாய்ப்பு என அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசானின் சலுகையுடன் சேர்த்து சில குறிப்பிட்ட வங்கிக் கடன் அட்டைகள், கேஷ்பேக், தவனைமுறை என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரைம் பயனர்கள் பணம் செலுத்துவதில் கூடுதல் சலுகைகளைப் பெற முடியும்.

சாம்சங் கேலக்சி எஸ் 25 அல்ட்ராவுக்கு ரூ.35,000 தள்ளுபடி

சாம்சங் கேலக்சி எஸ் 25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை ரூ. 1,29,999. தற்போது அமேசான் சலுகையுடன் ரூ. 94,999-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் பயனர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி கிடைக்கும்.

ஐசிஐசிஐ வங்கிக் கடன் அட்டை வைத்திருந்தால் கூடுதலாக ரூ. 5,000 தள்ளுபடி உண்டு. பிரைம் பயனர்களாக இருந்தால் மேலும் 5% கேஷ்பேக் உண்டு. இவற்றைப் பயன்படுத்தினால் பயனர்களால் ரூ. 44,499 சேமிக்க முடியும்.

சாம்சங் கேலக்சி எஸ் 25

சாம்சங் கேலக்சி எஸ் 25

சென்ஹைசர் ஹெட்ஃபோன்

இசைப் பிரியர்களுக்காக சென்ஹைசர் ஹெட்ஃபோனுக்கு ரூ. 13,250 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 34,990. தள்ளுபடியுடன் அமேசானில் ரூ. 21,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வங்கிகளுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு. எச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி உண்டு.

இத்துடன் சோனி, ஜேபிஎல், போட் போன்ற முன்னணி நிறுவனங்களுன் பொருள்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image

ஒன்பிளஸ் பேட் கோ 2

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கோ 2 என்ற கையடக்கக் கணினி (நோட் பேட்) விலை தள்ளுபடி விலையில் ரூ. 28,999-க்கு கிடைக்கிறது. மாதத் தவணை முறையும் உள்ளது. அதாவது மாதம் ரூ. 4,834 என 6 மாதங்களுக்கு கட்டலாம்.

ஒன்பிளஸ் பேட் கோ 2

ஒன்பிளஸ் பேட் கோ 2

எச்.பி. ஓம்னிபுக் 5

எச்.பி. நிறுவனத்தின் ஓம்னிபுக் 5 என்ற மடிக்கணியின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 88,225. சலுகை விலையில் ரூ.78,990-க்கு விற்பனையாகிறது. 14 அங்குல ஓஎல்இடி தொடுதிரையுடன் ஸ்நாப்டிராகன் X1-26-100 புராசஸர் உடையது.

ஹையர் 596 லிட்டர் ஃபிரிட்ஜ்

ஹையர் நிறுவனத்தில் 596 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டிக்கு அமேசான் சலுகை அறிவித்துள்ளது. 3 ஸ்டார் தரம் உடைய இந்த குளிர்சாதனப் பெட்டி 2 இன் 1 அம்சம் உடையது. வாட்டர் டிஸ்பென்சர், டிஜிட்டல் எல்.இ.டி. கன்ட்ரோலர், அட்டோமேட்டிக் கூலிங், வைஃபை இணைப்பு உள்ளிட்ட வசதிகள் உடையது. இதன் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 1,21,890.

அமேசான் சலுகையுடன் சேர்த்து பணம் செலுத்தும் முறையிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டைகளுக்கு 5% வரை தள்ளுபடி உள்ளது.

Summary

Amazon Great Freedom Sale 2026Top discounts on smartphones, tablets, headphones

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.