ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்தியாவிலேயே அபாரமான வசூலைச் செய்துள்ளது.
டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கிய ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே, உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாளைக்கு முன்பாக ஜூலை 30 ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இப்படத்தில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் டாம் ஹாலண்ட்டும், மிஷெல் ஜோன்ஸ்-வாட்சன் கதாபாத்திரத்தில் ஜெண்டயாவும் நடித்திருந்தனர்.
மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் 38-வது திரைப்படமான இப்படத்தை கெவின் ஃப்கி மற்றும் அமி பாஸ்கல் ஆகியோர் தயாரித்திருந்தனர். படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே படம் இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 552 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
மேலும், ஜூலை 17ஆம் தேதி வெளியாகி ரூ. 189 கோடி வசூலித்த கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிசி' மற்றும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த 'அப்செஷன்' ஆகிய படங்களையும் இப்படம் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படமாக 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' உருவெடுத்துள்ளது. முக்கியமாக, உலக அளவில் 2 பில்லியன் டாலருக்கும் (ரூ. 18,000 கோடி) அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The movie Spider-Man: Brand New Day has achieved tremendous box-office collections in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







