/

அவெஞ்சர்ஸ் வசூலை முந்திய ஸ்பைடர்மேன்: ரூ.9,000 கோடி வசூல் சாதனை!

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படத்தின் வசூல் சாதனை குறித்து...

News image

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே போஸ்டர். - படம்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ் இந்தியா.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 5:21 pm IST

நடிகர் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ’ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ என்ற திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.9,088 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 31) வெளியானது.  படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்தது. இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ.330 கோடி வசூலித்துள்ளது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரைக்கும் இந்தியாவில் ரூ. 165.85 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை ஸ்பைடர்மேன் திரைப்படம் முந்தி அசத்தியுள்ளது.

வட அமெரிக்காவில் முதல் வாரத்தில் 360 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் 357 மில்லியன் டாலர் வசூலித்திருந்தது.

இதுவரை மார்வெல்ஸ் ஸ்டூடியோஸ் படங்களில் சிறந்த ஓபனிங் கிடைத்தவைகளில் இந்தப் படம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

1. அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் - 1.22 பில்லியன் டாலர்

2. ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே - 942 மில்லியன் டாலர்

3. அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார் - 640 மில்லியன் டாலர்

4. ஸ்பைடர்மேன்: நோ வே ஓம் - 600 மில்லியன் டாலர்

Summary

Spider-Man: Brand New Day makes $942m at box office in second biggest opening weekend in history

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.