நடிகை மிருணாள் தாக்குர் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ஏஐ மூலம் ஆபாசமாக சித்திரிக்கும் நபர்களுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹலோ நந்தன் என்ற மராத்திய படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர், தமிழில் இதுவரை நடிக்கவில்லை. சிம்பு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஹிந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கும் மிருணாள் தாக்குர் சீதா ராமம் திரைப்படம் மூலம் பான் இந்திய நடிகையாக மாறினார். தெலுங்கில் எடுக்கப்பட்டாலும் பான் இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது. வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியானது.
பூஜா மேரி ஜான் படத்தில் நடித்து முடித்துள்ள மிருணாள் தாக்குர் தற்போது ராக்கா படத்திலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளின் புகைப்படங்கள் ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் மிருணாள் தாக்குர் கூறியிருப்பதாவது:
என்னையோ அல்லது என்னைப் போலவேயான டீப்ஃபேக் புகைப்படங்கள், விடியோக்களை உருவாக்குவதும் பரப்புவதும் சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
இது எனது நோட்டீஸ் எனக் கருதி உடனே நிறுத்தம்படி எச்சரிக்கிறேன். இனிமேல் எனது அடையாளத்தை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக ராஷ்மிகா மந்தனா, காத்ரினா கைஃப் ஆலியா பட் என பலரும் இதற்கு கண்டனன் தெரிவித்துள்ளார்கள்.
Summary
Mrunal Thakur warns of legal action over AI deepfakes
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

க்யூட் வாலா - மிருணாள் தாக்குர் பிறந்த நாள்! ரசிகர்கள் வாழ்த்து!

படப்பிடிப்பில் நடிகை ரஷ்மிகாவுக்கு பலத்த காயம்!

33 வயது நடிகை மிருணாள் தாக்குர், 24 வயது கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் டேட்டிங்?

அமோனியா வாயு கசிவு: தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

உதயநிதியை இளைய கலைஞர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்! | R.S. Bharathi | DMK | TVK



