எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?

நடிகை நிவெதா பெத்துராஜ்ஜின் எக்ஸ் பதிவு வைரலாகி வருவது பற்றி...

News image

நிவேதா பெத்துராஜ் - கோப்புப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 1:14 pm IST

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் என்ற திருக்குறளை நடிகை நிவேதா பெத்துராஜ் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கருத்துகளைப் பதிவிடுபவர் அல்ல.

எப்போதாவது மட்டுமே எக்ஸ் பக்கத்தில் பதிவிடும் நிவேதா பெத்துராஜ், பெரும்பாலும் திரைப்படங்கள் சார்ந்த போஸ்டர்களைதான் அதிகம் பகிர்ந்து வருகிறார்.

ஆனால், இன்று காலை திடீரென அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு திருக்குறளை பதிவிட்டு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.

ஒருபக்கம், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண்கள் தொடர்பான இழிவான கருத்துகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளத்தில் திருக்குறளை பதிவிட்டிருப்பதும், அதுவும் மிகச் சரியாக புறங்கூறுவது என்ற பொருளில் திருக்குறளை பதிவிட்டிருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.

அவர் தன்னடைய எக்ஸ் பதிவில், திருக்குறளில் 19வது அதிகாரமான புறங்கூறாமை என்ற தலைப்பில் உள்ள

“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கம் தரும்” என்ற திருக்குறளை இன்று காலை பதிவிட்டுள்ளார். அதுவும் மிகச் சரியாக உதயநிதி கைதாகும்போது இந்த பதிவு வெளியாகியிருக்கிறது.

இந்த திருக்குறளின் பொருள் எழுத்தாளர் மு. வரதராசன் உரையில், ”புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்‌‌” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உரையில், “கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு மத்தியில் திடீரென்று நிவேதா பெத்துராஜ் வெளியிட்டிருக்கும் பதிவால், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினும் நிவேதா பெத்துராஜும் இணைந்து ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Better to die than to live a life of backbiting and falsehood! Whom is Nivetha Pethuraj referring to in her X post?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.