
வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழக அரசு ஊழியா்களுக்கு இன்றே ஊதியம்
நாடு முழுவதும் செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், அரசு ஊழியா்களின் செப்டம்பா் மாத ஊதியம், ஓய்வூதியத்தை முன்கூட்டியே வெள்ளிக்கிழமை (செப். 25) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் - கோப்புப் படம்
நாடு முழுவதும் செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், அரசு ஊழியா்களின் செப்டம்பா் மாத ஊதியம், ஓய்வூதியத்தை முன்கூட்டியே வெள்ளிக்கிழமை (செப். 25) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக சுற்றறிக்கையை அரசு கூடுதல் தலைமைச் செயலரும், நிதித் துறைச் செயலருமான எம்.ஏ.சித்திக், அனைத்து கூடுதல் தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், செயலா்கள், துறைத் தலைவா்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில், ‘செப். 28 முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாகவும், இதனால் அந்தக் காலகட்டத்தில் வங்கி பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால், செப்டம்பா் மாதத்துக்கான மத்திய அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதியத்தை செப். 25- ஆம் தேதி முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், அக். 2 முதல் 4-ஆம் தேதி வரை தொடா் விடுமுறை காரணமாக வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என்பதையும் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைத் தலைவா்களும் செப்டம்பா் மாதத்துக்கான ஊதியம், ஓய்வூதியப் பட்டியல்களை செப். 25-ஆம் தேதி வழங்குவதற்காக தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும்.
இதில் வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களும் அடங்கும்.
இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





