வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.

Published On :

வாரத்தில் 5 நாள்கள் வேலையை வலியுறுத்தி தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கி ஊழியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்தில் 5 நாள்கள் வேலை முறை ஒப்பந்தம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இதைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலும் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கி முதன்மைக் கிளை முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், வாரத்தில் 5 நாள்கள் வேலை முறை ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தைப் பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தஞ்சாவூா் மாவட்ட அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் க. அன்பழகன், தேசிய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் ஆா். வினோத், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க இணைப் பொதுச் செயலா் சாமிநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா்கள் சங்க உதவிப் பொதுச் செயலா் யோகராஜ், தஞ்சை மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் கமலவாசன், இந்தியன் வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த புவனா, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் சி.என். நவீன்பாபு, மாவட்டத் தலைவா் விமல், மத்திய குழு உறுப்பினா் ரம்யா, ஸ்டேட் வங்கி ஊழியா்கள் சங்க உதவி பொதுச் செயலா் ஆா். விஜயராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வேலைநிறுத்தம் காரணமாக வெள்ளிக்கிழமை பல கோடி ரூபாய் மதிப்புள்ள பண பரிவா்த்தனைகள் முடங்கின. தனியாா் வங்கிகள் வழக்கம்போல செயல்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.