அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

ஞானேஷ் குமார் ராஜிநாமா உள்பட சிஜேபி விதித்த 3 நிபந்தனைகள்!

எஸ்ஐஆர் விவகாரத்தில் சிஜேபி சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து...

cjp demands on eci

நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்பட சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள்

Published On :

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட 3 நிபந்தனைகளை கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் விதித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் (எஸ் ஐ ஆர்) தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம் எழுப்பியதாகவும்; ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டுமென ஏராளமான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகுவதற்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 48 மணிநேரம் அவகாசம் அளித்துள்ளனர். அவர் பதவி விலகவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டத்தை சிஜேபி நடத்தும் என அதன் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (செப். 24) அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து ஞானேஷ் குமார் பதவி விலகுவது உள்ளிட்ட சில முக்கிய நிபந்தனைகளை சிஜேபி விதித்துள்ளது. இதுபற்றி, அவர்கள் கூறியதாவது:

1. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். அவருக்கு எதிராகக் குற்றவிசாரணை மேற்கொண்டு, வாக்குகளைத் திருட அவருக்கு யார் உத்தரவிட்டது எனப் பதிலளிக்க வேண்டும்.

2. தேர்தல்களை நிறுத்திவைத்தல்

வரவிருக்கும் அனைத்து தேர்தல்களும், எஸ்ஐஆர் பணிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 2025 ஜனவரி மாதத்தில் இருந்த வாக்காளர் பட்டியல் மீட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். எஸ்ஐஆர் பணிகள் குறித்து முடிவெடுக்கும் செயல்முறை பற்றி விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

எஸ்ஐஆர் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். எனவே, ஆதாரங்கள் காணாமல் போவதற்கு யாரும் தீ விபத்தைக் காரணமாகக் கூறமாட்டார்கள்.

3.தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம்

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான 2023 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை ரத்து செய்து, மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பொது சமூகத்தின் தீவிரப் பங்கேற்புடன் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.

Summary

cjp have laid down three conditions, including a demand for the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.