16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Zimbabwe team players

ஜிம்பாப்வே அணி வீரர்கள்

Published On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 15) தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பின், தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 15) நடைபெறும் நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 18 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவுக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டிகளுக்கான ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ரிச்சர்ட் நிகராவா காயம் காரணமாக அணியில் இடம்பெறாததால், அணியை சிக்கந்தர் ராஸா கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்

சிக்கந்தர் ராஸா (கேப்டன்), பென் கரண், பிளஸ்ஸிங் முசராபானி, பிராட் ஈவன்ஸ், பிரண்டன் டெய்லர், பிரையன் பென்னட், கிரைக் எர்வின், எர்னஸ்ட் மசுகு, கிரீம் கிரெமர், இன்னோசன் கையா, நியூமேன் நியாம்ஹுரி, ரியான் பர்ல், மருமானி, வெலிங்டன் மசகட்ஸா, வெஸ்லி மத்வீர்.

Summary

The Zimbabwe Cricket Board has announced the squad for the ODI series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.