FOLLOW US

ON GOOGLE DISCOVER

பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

south african players

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் - படம் | AP

Published On :8 செப்டம்பர் 2026, 5:46 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி டர்பனில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடியிருந்த டெம்பா பவுமா, மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அணியைக் கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், கார்பின் பாஷ், மேத்யூ ப்ரீட்ஸ்க், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபோர்டூயின், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், குவெனா மாபாகா, அய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி - செப்டம்பர் 24, டர்பன்

இரண்டாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 27, ஜோஹன்ஸ்பெர்க்

மூன்றாவது ஒருநாள் போட்டி - செப்டம்பர் 30, பாட்செஃப்ஸ்ட்ரூம்

Summary

The South African cricket board has announced the squad for the ODI series against Australia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.