மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

தெ.ஆ., ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. லபுஷேன் நீக்கம்!

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Marnus Labuschagne

மார்னஸ் லபுஷேன்.

Published On :1 செப்டம்பர் 2026, 12:38 pm IST

தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் மோதும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் அடுத்தாண்டு (2027) தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்குத் தயாராகும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், முத்தரப்பு தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவிருக்கிறது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக வருகிற செப். 15 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியைத் தொடர்ந்து செப். 18, செப். 20 என அடுத்தடுத்து நடைபெறுகின்றன. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து செப். 24-ல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

இந்த இரண்டு தொடர்களுக்குமான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த அணியில் கடந்த உலகக் கோப்பையில் விளையாடிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் அதிகரித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான மார்னஸ் லபுஷேன், 2022 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணியில் நிரந்தர இடத்தைத் தக்கவைத்திருந்தார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு அதன்பின்னர் சாதகமாக அமையவில்லை. இதனால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி, இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று அணித்தேர்வர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பைக்கு முன்னதாக அறிமுக வீரரான ஜோயல் டேவிஸ், ஆலிவர் பீக் மற்றும் கூப்பர் கானலி ஆகியோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயதேயான ஆலிவர் பீக்-க்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இருவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடுகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி: சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, பேட் கம்மின்ஸ், ஜோயல் டேவிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மிட்செல் மார்ஷ், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

Summary

Out-of-form batter Marnus Labuschagne has been dropped from Australia's squad for the ODI series in Zimbabwe and South Africa later this month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.