ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி விளையாடினால்... சனத் ஜெயசூர்யா கூறியதென்ன?

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

Rohit sharma - Virat kohli

ரோஹித் சர்மா - விராட் கோலி

Published On :

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக அணிகள் அனைத்தும் இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடினால், இளம் வீரர்கள் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என அனைத்து வீரர்களுடனும் சமபலத்துடன் உள்ளது. இளம் வீரர்கள் மூத்த வீரர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால், அணியில் மூத்த வீரர்கள் இருப்பது மிகவும் முக்கியம்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அணியில் இளம் மற்றும் மூத்த வீரர்கள் கலந்து இருப்பது எதிர்கால உலகக் கோப்பைத் தொடர்களுக்கும் சிறப்பானதாகும் என்றார்.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Sri Lankan player Sanath Jayasuriya has stated that both Rohit Sharma and Virat Kohli should play in the ODI World Cup tournament scheduled for next year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER