கால்பந்து உலகக் கோப்பைக்காக, நட்சத்திர வீரர்கள் நிரம்பிய 26 பேர் கொண்ட பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிளியன் எம்பாபே, பேலந்தோர் விருது வென்ற உஸ்மான் டெம்பெலெ இருக்கிறார்கள்.
கடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்ற பிரான்ஸ் அணியில் தற்போது இருப்பவர்கள் எல்லாமே மிகப்பெரிய நட்சத்திர வீரர்களாக மாறியுள்ளார்கள்.
நட்சத்திர வீரர் கிளியன் எம்பாபே பிரான்ஸ் அணிக்காக 56 கோல்கள் அடித்துள்ளார். பிரான்ஸ் நாட்டிற்காக அதிக கோல் அடித்தவர்களில் (57) ஆலிவர் கிரௌன்ட் முதலிடத்தில் இருக்க, எம்பாபே இரண்டாமிடம் வகிக்கிறார்.
கடந்த சீசனில் டெம்பெலே 35 கோல்கள் அடித்து சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக பிஎஸ்ஜி கோப்பை வெல்ல உதவினார். அவருக்கு பேலந்தோர் விருதும் கிடைத்தது.
மைக்கேல் ஒலிசே தற்போது பயர்ன் மியூனிக் அணியில் விளையாடி வருகிறார். இளம் வீரர் டிசைர் டூவே பிஎஸ்ஜி அணிக்காக அசத்தலாக விளையாடி வருகிறார். கமவிங்கா சிறந்த தடுப்பாட்டத்திற்கு பெயர்போனவர்.
பிரீமியர் லீக்கில் அசத்தும் ரயான் செர்கி, வில்லியம் சலிபா உள்பட 7 வீரர்கள் இந்த பிரான்ஸ் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2018 உலகக் கோப்பை வென்ற அணியில் இருந்த நால்வர் மட்டுமே இந்த உலகக் கோப்பையிலும் இருக்கிறார்கள்.
நட்சத்திர வீரர் ஹியூகோ எகிடிகே காயம் காரணமாக இந்த உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
உலகக் கோப்பைக்கான பிரான்ஸ் கால்பந்து அணி
கோல்கீப்பர்கள்: மைக் மைக்னன் (ஏசி மிலன்), ரோபின் ரிஸ்ஸெர் (லென்ஸ்), பிரிக் சம்பா (ரென்னெஸ்)
டிஃபெண்டர்கள்: லுகாஸ் டிக்னே ( ஆஸ்டன் வில்லா), மலோ கஸ்டோ (செல்ஸி), லூகாஸ் ஹெர்னான்டெஸ் (பிஎஸ்ஜி), தியோ ஹெர்னான்டெஸ் (அல் -ஹிலால்), இப்ரஹிம் கொனடே (லிவர்பூல்), மக்செனஸ் லாக்ராக்ஸ் (கிரிஸ்டல் பேலஸ்), ஜூல்ஸ் குண்டே (பார்சிலோனா), வில்லியம் சலிபா (ஆர்செனல்), டயோட் உபமெனகோ (பயர்ன் மியூனிக்)
மிட்ஃபீல்டர்கள்: கோலே கண்டே (ஃபெனெர்பாச்), மனு கொனே (ரோமா), அட்ரைன் ராபியேட் (ஏசி மிலன்), ஆரேலியென் டசுமேனி (ரியல் மாட்ரிட்), வாரென் ஜெய்ரி-எமெரி (பிஎஸ்ஜி).
ஃபார்வேடுகள்: மாக்னஸ் அகிலோசி (மோனாகோ), பிராட்லி பார்கோலோ (பிஎஸ்ஜி), ரயான் செர்கி (சிட்டி), உஸ்மான் டெம்பெலே (பிஎஸ்ஜி), டிசைர் டோவே (பிஎஸ்ஜி), மைக்கேல் ஒலிசி (பயர்ன் மியூனிக்), கிளியன் எம்பாபே (ரியல் மாட்ரிட்), ஜேன் பிலிப் மடேடா (கிரிஸ்டல் பேலஸ்), மார்கஸ் துரம் (இன்டர் மிலன்)
Summary
France unveil star-studded FIFA World Cup squad
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஹீரா, புர்னா பாய் கூட்டணியில் கால்பந்து உலகக் கோப்பைக்கான பாடல்!

கால்பந்து உலகக் கோப்பை தொடக்க விழாவில் நடனமாடும் பாகுபலி பட நடிகை!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

