ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!

வங்கதேசத்தின் புதிய அதிபராக பிஎன்பி மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

Mirza Fakhrul Alamgir

வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... - எக்ஸ்

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:58 pm IST

வங்கதேசத்தின் புதிய அதிபராக வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் அதிபராகப் பதவி வகித்து வந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன் தனது பதவிக்காலம் நிறைவடையும் முன்னரே கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) வேட்பாளராக, 78 வயதான மூத்த தலைவர் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் களமிறக்கப்பட்டார்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஆக. 20) வாக்கெடுப்பின் மூலம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீரை புதிய அதிபராக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

343 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில் மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் 255 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட 11 எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஒலி அகமது 88 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இதையடுத்து, வங்கதேசத்தின் 23 ஆவது அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் நாளை (ஆக. 21) மாலை பதவியேற்பார் எனக் கூறப்பட்டுள்ளது.

Summary

Mirza Fakhrul Alamgir, a senior leader of the Bangladesh Nationalist Party, has been selected as the 23rd President of Bangladesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.