வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

வங்கதேசத்தில் நாளை அதிபர் தேர்தல்! 35 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு மூலம் தேர்வு!

வங்கதேசத்தில் நாளை வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்தல் நடத்தப்படுவது குறித்து...

News image

வங்கதேசத்தில் அதிபர் தேர்தல் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:49 pm IST

வங்கதேசத்தில், வரும் வியாழக்கிழமை (ஆக. 20) வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் அதிபராகப் பதவி வகித்து வந்த அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன் தனது பதவிக்காலம் நிறைவடையும் முன்னரே மருத்துவக் காரணங்களால் கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்தார்.

பிரதமர் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சியின் ஆட்சி (பிஎன்பி) நடைபெற்று வரும் நிலையில், வங்கதேசத்தின் புதிய அதிபருக்கான தேர்தலில் அக்கட்சியின் சார்பில் 78 வயதான மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு எதிராக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒலி அகமது 11 எதிர்க்கட்சிகள் இடம்பெற்ற கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

வங்கதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபருக்கான தேர்தலில், மூன்றில் இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிஎன்பி-யின் வேட்பாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் வங்கதேச அதிபர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், வரும் வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் அதிபர் தேர்தலில் வாக்கெடுப்பு முறை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்படும் வங்கதேசத்தின் புதிய அதிபர் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 21) மாலை பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

the presidential election will be held in Bangladesh this coming Thursday through a vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.