தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!

சென்செக்ஸ் 412.57 புள்ளிகள் சரிந்து 76,822.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 76.60 சரிந்து 24,078.30 புள்ளிகளாக நிலைபெற்றது.

கோப்புப் படம்

Published On :

மும்பை: அமெரிக்கா-ஈரான் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகும் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இதனால், முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அமெரிக்கா-ஈரான் இடையிலான 60 நாள் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எவ்வித முன்னேற்றமின்றி முடிவுக்கு வந்தது. இது எரிசக்தி விநியோகத்தில் நீண்டகால பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் மீண்டும் பற்றி கொண்டது.

தொடர்ந்து 4 வது நாளாக 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 325.78 புள்ளிகள் சரிந்து 76,909.68 புள்ளிகளாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 412.57 புள்ளிகள் சரிந்து 76,822.89 புள்ளிகள் வரை சென்ற நிலையில், கடந்த நான்கு நாட்களில் இந்தக் குறியீடு 1,170.28 புள்ளிகளை இழந்துள்ளது.

இதனை தொடர்ந்து 7 வது நாளாக சரிவைச் சந்தித்த 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி இன்றும் 76.60 புள்ளிகள் சரிந்து 24,078.30 புள்ளிகளாக நிலைபெற்றது. கடந்த ஏழு வர்த்தக அமர்வுகளில் நிஃப்டி 505.5 புள்ளிகள் இழந்துள்ளது.

சென்செக்ஸில் பவர் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ, ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் எச்சிஎல் டெக், எடர்னல், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்தன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரக்கூடும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதனிடையில், அமெரிக்க எஃப்.ஓ.எம்.சி. கூட்டத்தின் முடிவுகள் வெளியாகி இருந்த நிலையில், பங்குச் சந்தைகள் எச்சரிக்கை போக்கைக் கையாண்டது.

அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் குறித்த எவ்வித தீர்வும் எட்டப்படாதது, கச்சா எண்ணெய் விலையை மற்றும் பங்கு பத்திர வருவாயை உயர்வாகவே வைத்திருந்தது.

ஆசியச் சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.80 சதவீதம் சரிந்தன. ஜப்பானின் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதே வேளையில், ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஐரோப்பியச் சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் சரிந்த நிலையில், அமெரிக்கச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று ரூ. 1,651.53 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.04 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 91.97 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Sensex and Nifty closed lower on Wednesday as elevated crude oil prices dented investor sentiment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.