இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி...

opposition leaders detained in delhi protest against gyaneshkumar

வானொலி அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்ட ராகுல், பிரியங்கா - PTI

Published On :

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் இன்று பேரணியாகச் சென்றனர்.

அப்போது தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி,க்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனிடையே, காவல்துறையின் தடையை மீறி, ஆகாஷ்வாணி பவனுக்குள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நுழைந்துள்ளனர். வானொலி அலுவலகத்துக்குள் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

அங்கிருந்து தேர்தல் ஆணையத்திற்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்கட்சியினரின் போராட்டத்தால் தில்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

opposition leaders detained in delhi protest against gyanesh kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER