தில்லி போராட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர் மீது தாக்குதல்!
தில்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தில்லி போராட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் - PTI
தில்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலில் காயமடைந்த வீரர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது காயங்களின் தன்மை, தாக்கப்பட்ட ஆயுதம் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதனைத் தொடர்ந்து, தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பதைக் கண்டறியவும், அதில் தொடர்புடையவகளை அடையாளம் காணவும் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின் முடிவில் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் எஸ்ஐஆர் தொடர்பான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு பாதுகாப்புப் படை வீரருக்கு இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அங்கு பல முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
Summary
Security force personnel attacked during the Delhi protest!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






