தில்லி அரை மாரத்தானில் கென்ய வீரர் வரலாற்றுச் சாதனை..! முதல்வர்கள் ரேகா குப்தா, ஒமர் அப்துல்லா பங்கேற்பு!
தில்லி அரை மாரத்தான் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ய வீரர் குறித்து...

தில்லி அரை மாரத்தானில் தில்லி, ஜம்மு காஷ்மீர் முதல்வர்கள். நடுவில் வெற்றியாளர். - படங்கள்: எக்ஸ் / தில்லி ஹால்ப் மாரத்தான்
தில்லி அரை மாரத்தான் ஆடவர் பிரிவில் கென்ய வீரர் சார்லஸ் மட்டாட்டா அதிவேகமாக இலக்கை கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
மகளிர் பிரிவில் எத்தியோப்பியாவின் வுடினேஷ் அலெமு சாம்பியன் பட்டம் பெற்றார். இருவருக்கும் தலா ரூ. 3,50,000 பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
தில்லி அரை மாரத்தான் 2005 முதல் நடைபெற்று வருகின்றது. தற்போது வேதாந்தா தில்லி அரை மாரத்தான் என அழைக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு திடலில் இந்தப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், தில்லி முதல்வர் ரேகா கும்பா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மாரத்தான் என்பது 42.2 கி.மீ தூரம் ஓடுவதைக் குறிக்கும். அரை மாரத்தான் என்பது இதில் பாதியான 21.1 கிலோ மீட்டர் தூரத்தைக் குறிக்கும்.
ஆடவர் பிரிவில் கென்யாவின் சார்லஸ் மட்டாட்டா 58 நிமிஷங்கள் 52 நொடிகளில் கடந்து வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார். முன்னதாக, எத்தியோப்பியாவின் அமெடெவொர்க் வாலெலெக்ன் 2020ல் 58 நிமிஷங்கள் 53 நொடிகளில் ஓடியதே சாதனையாக இருந்தது.
தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக சார்லஸ் மட்டாட்டாவுக்குக் கூடுதலாக ரூ.11,39,586 அளிக்கப்பட்டுள்ளது. பரிசுத்தொகை ரூ. 25,64,068 அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவரது ட்வின் சகோதரர் அலெக்ஸ் மட்டாட்டா 2025 எடிஷனில் 59 நிமிஷங்கள் 50 நொடிகளில் கடந்து சாம்பியனாகியதும் நினைவுகூரத்தக்கது.
டாப் 3 இடங்களையும் கென்ய வீரர்களே பிடித்து அசத்தினார்கள். சாம்வெல் நியாமாய் மைலு (59:24), ஸ்டான்லி வைதகா முபுரு (59:33) முறையே இரண்டு, மூன்றாம் இடங்களைப் பிடித்தார்கள்.
மகளிர் பிரிவில் அலெமு 1 மணி நேரம் 35 நிமிஷங்களில் வென்று முதலிடம் பிடித்தார். கென்யாவைச் சேர்ந்த செலா புசினி (1:07:01) மற்றும் சிந்தியா செலங்காட் செப்க்வோனி (1:07:32) முறையே இரண்டு, மூன்றாம் இடங்களைப் பிடித்தார்கள்.
ஆண்களுக்கான இந்திய எலைட் மாரத்தானில் சைலேஷ் குஷ்வாஹா ஒரு மணி நேரம், ஐந்து நிமிடங்கள் மற்றும் ஐந்து நொடிகளில் வெற்றி பெற்றார். கௌரவ் மாத்தூர் (1:05:11) மற்றும் ஹேமந்த் குமார் (1:05:37) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
இந்திய மகளிர் பிரிவில், அங்கிதா தியானி ஒரு மணி நேரம், 12 நிமிடங்கள் மற்றும் 46 நொடிகளில் முதலிடத்தைப் பிடித்தார். சோனியா (1:14:56) மற்றும் பகீரதி (1:15:51) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.
இந்திய ஆடவர், மகளிர் பிரிவில் டாப் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு முறையே ரூ. 3,50,000, ரூ. 2,50,000 and ரூ. 1,50,000 அளிக்கப்பட்டன.
The 21st edition of the #DelhiHalfMarathon has concluded at Jawaharlal Nehru Stadium in the National Capital.
— All India Radio News (@airnewsalerts) October 18, 2026
The Marathon witnessed participation from Union Minister of Parliamentary Affairs @KirenRijiju, Delhi Chief Minister @gupta_rekha, Jammu and Kashmir Chief Minister⦠pic.twitter.com/c2r3Hwfr5c
Summary
Charles Matata wins Delhi Half Marathon men's race with course record, Alemu takes women's crown
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


