தொடர் விடுமுறை: சென்னை மாநகர் பேருந்துகளில் 3 நாள்களில் 4.15 லட்சம் பேர் பயணம்!சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேக்கம் இல்லை: மாநகராட்சி தகவல்! 137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

நடப்பு சீசனில் 11ஆவது ஆட்ட நாயகன் விருதை வென்ற மெஸ்ஸி: ஹாட்ரிக் வெற்றியில் இன்டர் மியாமி!

எம்எல்எஸ் தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்து...

Messi is man of the match, hat-trick in Inter Miami win

மெஸ்ஸி ஆட்ட நாயகன், ஹாட்ரிக் வெற்றியில் இன்டர் மியாமி - படம்: எக்ஸ் / இன்டர் மியாமி

Updated On :

எம்எல்எஸ் தொடரில் இன்றைய போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். நடப்பு சீசனில் இது அவருக்கு 11ஆவது ஆட்ட நாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டா யுனைடெட் அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமி உடன் மோதியது. இதில் மியாமி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தப் போட்டியில் முதல் பாதியின் கடைசி நிமிஷத்தில் மியாமியின் ஜெர்மன் பெர்டர்மே கோல் அடித்து 1-0 என முன்னிலைப் பெற வைத்தார்.

இரண்டாம் பாதியில் மெஸ்ஸி 56, 60ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 3-0 என முன்னிலைப் பெற வைத்தார். அதிலும் 56ஆவது நிமிஷத்தில் அவர் அடித்த கோல் வின்டேஜ் மெஸ்ஸியை ஞாபகப்படுத்தியது.

கடைசியில் பெனால்டி வாய்ப்பில் அட்லாண்டா அணி 89ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தது. இறுதியில் ஸ்டாப் டைம் முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மியாமி வென்றது. மெஸ்ஸி ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

இந்த வெற்றியுடன் இன்டர் மியாமிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. கடந்த போட்டியில் வெல்லும்போதே பிளே ஆஃப்ஸுக்கு தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Lionel Messi scores twice, Inter Miami to 3-1 victory over Atlanta United

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.