தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

மெஸ்ஸியின் 3 கோல்களை தடுத்த கொலம்பஸ் கோல்கீப்பர்..! இன்டர் மியாமிக்கு முதல் தோல்வி!

எம்எல்எஸ் கோப்பைக்கான முதல் பிளேஆஃப் ஆட்டத்தில் இன்டர் மியாமி அணியின் தோல்வி குறித்து...

Lionel Messi, Columbus goalkeeper

லியோனல் மெஸ்ஸி, கொலம்பஸ் கோல்கீப்பர் - படங்கள்: எக்ஸ் / இன்டர் மியாமி, எம்எல்எஸ்

Updated On :

அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்எஸ் கோப்பைக்கான முதல் பிளேஆஃப் ஆட்டத்தில் இன்டர் மியாமி அணி கொலம்பஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி தனது சொந்த மண்ணில் இன்று அதிகாலை புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தில் நிறைவு செய்த கொலம்பஸ் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 43 சதவிகித நேரமும் கொலம்பஸ் அணி 57 சதவிகித நேரமும் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தார்கள்.

மிகவும் விருவிருப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் கொலம்பஸ் அணி 3-0 என அபார வெற்றி பெற்றது. கொலம்பஸ் வீரர்கள் மூவருக்கும் இன்டர் மியாமி வீரர்கள் ஐவருக்கும் யெல்லோ கார்டுகள் அளிக்கப்பட்டன.

இண்டர் மியாம்யின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கும் யெல்லோ கார்டு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி இலக்கை நோக்கி அடித்த மூன்று அற்புதமான ஷாட்டுகளையும் கொலம்பஸ் கோல்கீப்பர் பேட்ரிக் ஷூல்டே அபாரமாக செயல்பட்டுத் தடுத்தார்.

இந்தப் போட்டியின் 36ஆவது நிமிஷத்தில் இன்டர் மியாமி அணியின் வீரர் கோன்சாலோ லுஜனுக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. 10 பேருடன் இன்டர் மியாமி தடுமாறியது.

ஐந்து கோல்களைத் தடுத்த கொலம்பஸ் கோல்கீப்பர் பேட்ரிக் ஷூல்டே ஆட்ட நாயகன் விருது வென்றார். எம்எல்எஸ் தொடரில் இரண்டாவது பிளேஆஃப் போட்டியில் இன்டர் மியாமி கொலம்பஸின் சொந்த மண்ணில் மோதுகிறது.

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி வென்றால் மட்டுமே, இருவருக்குமான மூன்றாவது போட்டிக்கு ஆட்டம் செல்லும்; இல்லையெனில் கொலம்பஸ் வென்றால் நேரடியாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Columbus goalkeeper denies Messi three goals..! First defeat for Inter Miami!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.