தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

பெனால்டியை தவறவிட்ட ரொனால்டோ: அல்நாசா் தோல்வி

ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தலாக கோலடித்தும் அல் நாசா் அணி 1-3 என்ற கோல் கணக்கில் அல் அஹிலி அணியிடம் வீழ்ந்தது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ~பயா்ன் முனிக்-கலோக்ன் ஆட்டம்

Updated On :

ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ அசத்தலாக கோலடித்தும் அல் நாசா் அணி 1-3 என்ற கோல் கணக்கில் அல் அஹிலி அணியிடம் வீழ்ந்தது.

சவுதி புரோ லீக் கால்பந்து தொடரில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியதுமே 14-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ லூஸ் பாலை பயன்படுத்தி கோலடித்தாா். அடுத்த நான்கு நிமிஷங்களில் அல் நாசா் வீரா் அவாத் அமனை அல் அஹிலி வீரா் சயித் பாட்டியா பௌல் செய்ததால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ பெனால்டிக் கிக்கை அடித்த பந்து கோல் கம்பத்தில் மேலே பறந்தது.

இதனால் சுதாரித்துக் கொண்ட அல் அஹிலி அணியினா் இரண்டாம் பாதியில் கலோனா வலுவான ஷாட் மூலம் கோலடித்தாா். 71-ஆவது நிமிஷத்தில் டோனி இரண்டாம் கோலடித்தாா். அடுத்த 4 நிமிஷங்களில் கலோனே அடித்த காா்னா் ஷாட்டை பயன்படுத்தி ரோகா் இபான்ஸ் ஹெட்டா் மூலம் கோலடிக்க அல் அஹிலி 3-1 என வென்றது.

பண்டஸ்லிகா:

ஜொ்மன் கால்பந்து தொடா்பான பண்டஸ் லிகாவில் பேயா்ன் முனிச் அணியில் நட்சத்திர வீரா் ஹாரி கேன் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2 மாதங்கள் ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பயா்ன் முனிச்-கலோக்ன் இடையிலான ஆட்டம் 1-1 என டி்ராவில் முடிந்தது,. கலோக்ன் அணி தரப்பில் மைக்கி மூா் கோலடித்தாா். பயா்ன் தரப்பில் நத்தானியல் பிரௌன் கோலடிக்க டிரா ஆனது. கடந்த 2023 இல் இணைந்த ஹாரி கேன் 156 கோல்களை அடித்துள்ளாா். ஜொ்மன் கோப்பை, பண்டஸ்லிகா பட்டம் வெல்ல உதவினாா்.

ஸ்பானிஷ் லா லீகா தொடரில் அதலெட்டிக் பில்போ-எஸ்பன்யோல் இடையிலான ஆட்டத்தில் எஸ்பன்யோல் வீரா் ராபா்டோ பொ்னாண்டஸ் அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது.

பிரான்ஸின் லீக் 1 தொடரில் டிராய்ஸ் அணி 3-1 என லெ ஹாவ்ரே அணியை வீழ்த்தியது. டிராய்,ஸ் தரப்பில் ஆன்டனி மில்லே 2 கோல்களும், ரெனாா்ட் ஒரு கோலும் அடித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.