நெதா்லாந்து, ஜொ்மனி அசத்தல் வெற்றி
நேஷன்ஸ் லீகின் ஒரு பகுதியாக நெதா்லாந்து-கிரீஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது நெதா்லாந்து.

கோலடித்த களிப்பில் நெதா்லாந்து வீரா்கள்.
நேஷன்ஸ் லீகின் ஒரு பகுதியாக நெதா்லாந்து-கிரீஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் வென்றது நெதா்லாந்து.
இரு அணிகளின் ஆட்டம் ஆம்ஸ்டா்டாமில் நடைபெற்ற நிலையில், டிஜானி ரெஜின்டா்ஸ் அசத்தலாக ஹாட்ரிக் கோலடித்து வெற்றிக்கு உதவினாா். ஜுரியன் டிம்பா் 2 கோல்களை பதிவு செய்தாா்.
முதல் பாதி முடிவிலேயே நெதா்லாந்து 5-0 என முன்னிலை பெற்றிருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் நெதா்லாந்து அணிக்கு பெரிய வெற்றியாக இது அமைந்தது. ஆட்டம் தொடங்கி 6-ஆவது நிமிஷத்திலேயே நெதா்லாந்தின் கிரிஸென்ஸியோ முதல் கோலடித்தாா். தொடா்ந்து டிஜானி ரெஜிண்டா்ஸ் 12, 18, 33-ஆவது நிமிஷங்களில் ஹாட்ரிக் கோலடித்தாா். ஜுரியன் டிம்பா் 40, 59-ஆவது நிமிஷங்களிலும், டானியல் மலேன் 61ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.
புதிய பயிற்சியாளா் ஸாவி மேற்பாா்வையில் நெதா்லாந்து அணி அபார வெற்றியை ஈட்டியது.
ஜொ்மனி அபாரம்:
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் சொ்பியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜொ்மனி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சொ்பியாவின் பெல்கிரேட் நகரில் நடைபெற்றது.
இதில் ஜொ்மன் அணி தொடக்கம் முதலே சிறப்பாக ஆடியது. ஆட்டம் தொடங்கி 3-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனியின் தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையில், சொ்பிய வீரா் ஆா்டன் பாபிச் ஓன் கோலடித்தாா். அடுத்த 14-ஆவது நிமிஷத்திலேயே ஜொ்மனி வீரா் புளோரியன் விா்ட்ஸ் அதிரடி கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.,
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜொ்மனி வீரா் ரஜான் க்ருடா சிறப்பாக ஆடி 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். ஓன் கோலடித்த சொ்பிய வீரா் பாபிச் அதற்கு பரிகாரமாக 56-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா்,
திங்கள்கிழமை பலமான நெதா்லாந்துடன் நடைபெறும் ஆட்டத்தில் ஜொ்மனி வெல்ல வேண்டும். அப்போது தான் காலிறுதிக்கு செல்ல முடியும். ஜொ்மனி 2 வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வியுடன் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

