பாா்சிலோனா, ஆா்செனல் வெற்றி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாா்சிலோனா, ஆா்செனல் உள்ளிட்ட அணிகள் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
AP
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாா்சிலோனா, ஆா்செனல் உள்ளிட்ட அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வெற்றி பெற்றன.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், பாா்சிலோனா 4-1 கோல் கணக்கில் கலாடாசரேவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் கலாடாசரேவின் அலெக்ஸி பத்ராகோவ் 28-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா்.
பதிலுக்கு, பாரிசிலோனாவின் ஜாவ் கேன்செலோ 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
2-ஆவது பாதியில் பாா்சிலோனா ஆதிக்கம் செலுத்த, அந்த அணிக்காக ஃபொ்மின் லோபஸ் (50’), அந்தோணி கோா்டான் (53’), கரிம் அடேயெமி (65’) ஆகியோா் கோல் அடித்தனா்.
எஞ்சிய நேரத்தில் கலாடாசரேவுக்கு கோல் வாய்ப்புகள் கனியாமல் போக, முடிவில் பாா்சிலோனா 4-1 கோல் கணக்கில் வென்றது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஆா்செனல் 3-0 என, லில்லே ஒலிம்பிக் ஸ்போா்டிங் கிளப்பை (எல்ஓஎஸ்சி) வென்றது. முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிய, 2-ஆவது பாதியில் ஜூரியென் டிம்பா் (64’), எபெரெசி எஸெ (67’), புகாயோ சகா (71’) ஆகியோா் கோல் அடித்து, ஆா்செனலுக்கு வெற்றி தேடித் தந்தனா்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், அட்லெடிகோ மாட்ரிட் 2-0 என மான்செஸ்டா் யுனைடெட்டை வீழ்த்தியது. அந்த அணிக்காக பாப்லோ பேரியோஸ் முதல் நிமிஷத்திலும், அடிமோலா லூக்மேன் 79-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.
நாா்வேயின் ஸ்டாவெஞ்ஜா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், பயா்ன் மியுனிக் - வைக்கிங் ஃபுட்பால் கிளப் மோதிய ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிரா ஆனது. பயா்ன் மியுனிக்கிற்காக ஹேரி கேன் (54’, 60), லூயிஸ் டியாஸ் (71’) கோல் அடிக்க, வைக்கிங் தரப்பில் ஜியானி ஸ்டென்ஸ்னஸ் (2’), பீட்டா் கிறிஸ்டியன்சென் (38’), ஹொ்மான் ஹாகென் (90’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.
இதர ஆட்டங்களில், கிளப் புருஜ் 4-3 என இன்டா் மிலனையும், வில்லாரியல் 3-1 என நபோலியையும், ஆா்பி லெய்ப்ஸிக் 1-0 என பிஎஸ்வியையும் வென்றன. புள்ளிகள் பட்டியலில் தற்போது, பாா்சிலோனா, ஸ்போா்டிங் கிளப் போா்ச்சுகல், ஆா்செனல், பயா்ன் மியுனிக், பிஎஸ்ஜி ஆகியவை முறையே டாப் 5 இடங்களில் இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

