புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பாா்சிலோனாவுக்கு 2-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா எஃப்சி 2-0 கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

Published On :

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா எஃப்சி 2-0 கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவின் கோல் கணக்கை ரஃபினா 37-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். இந்த முன்னிலையுடன் முதல் பாதியை அந்த அணி நிறைவு செய்தது.

2-ஆவது பாதியிலும் பாா்சிலோனாவே ஆதிக்கம் செலுத்த, 82-ஆவது நிமிஷத்தில் ஃபொ்மின் லோபஸ் அடித்த கோலால் அந்த அணி 2-0 என முன்னிலையை அதிகரித்தது.

எஞ்சிய நேரத்திலும் அத்லெடிக் கிளப்புக்கு கோல் வாய்ப்பு வழங்காத பாா்சிலோனா, முடிவில் 2-0 கோல் கணக்கில் வெற்றி கண்டது. போட்டியில் இத்துடன் தொடா்ந்து 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்து பாா்சிலோனா முதலிடத்தில் இருக்கிறது.

2 ஆட்டங்களில் தோல்வியுடன் அத்லெடிக் கிளப் கடைசி இடத்தில் உள்ளது. இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், ஒசாசுனா 2-1 கோல் கணக்கில் செல்டா விகோவை வென்றது.

இந்த ஆட்டத்தில் ஒசாசுனாவுக்காக கிகெ பாா்ஜா 54-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்க, அன்டெ புடிமிா் 64-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் அதை 2-ஆக அதிகரித்தாா்.

செல்டாவுக்கான ஆறுதல் கோல், 14-ஆவது நிமிஷத்திலேயே இயாகோ அஸ்பஸால் அடிக்கப்பட்டது. இதனிடையே, 51-ஆவது நிமிஷத்தில் செல்டா வீரா் மாா்கோஸ் அலோன்சோ ‘ஃபௌல்’ செய்து ரெட் காா்டு மூலமாக வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஒசாசுனா 2 ஆட்டங்களில் முதல் வெற்றியுடன் 7-ஆம் இடத்திலும், செல்டா 2 ஆட்டங்களில் முதல் தோல்வியுடன் 14-ஆவது இடத்திலும் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.