நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இங்கிலாந்து, ஸ்பெயின் வெற்றி

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் தங்கள் ஆட்டத்தில் புதன்கிழமை வெற்றி கண்டன.

Published On :

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் தங்கள் ஆட்டத்தில் புதன்கிழமை வெற்றி கண்டன.

லண்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 3-0 கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் கோல் கணக்கை, செக் குடியரசு வீரா் விளாதிமீா் கோஃபல் தவறுதலாக ‘ஓன் கோல்’ மூலமாக 27-ஆவது நிமிஷத்தில் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் 40 மற்றும் 57-ஆவது நிமிஷங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தாா். இறுதி வரை போராடியும் செக் குடியரசால் கோல் வாய்ப்பு பெற முடியாமல் போனது. முடிவில் இங்கிலாந்து 3-0 கோல் கணக்கில் வென்றது.

இதனிடையே குரோஷியாவின் ஸ்பிலிட் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ஸ்பெயின் 2-1 கோல் கணக்கில் குரோஷியாவை வென்றது.

முதலில் குரோஷிய வீரா் இவான் பெரிசிச் 17-ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தாா். முதல் பாதியில் அந்த முன்னிலையை குரோஷியா அப்படியே தக்கவைத்தது.

இந்நிலையில், 2-ஆவது பாதியில் ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்த, அதன் வீரா் மைக்கேல் மெரினோ 61 மற்றும் 88-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அணிக்கு முன்னிலை தேடித் தந்தாா்.

அதன் பிறகு குரோஷியாவுக்கு மீண்டும் கோல் வாய்ப்பு வழங்காத ஸ்பெயின், 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

குரூப் ‘சி’-யில் இருக்கும் மேற்குறிப்பிட்ட 4 அணிகளுமே தலா 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், ஸ்பெயின் 4 வெற்றிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 3 வெற்றிகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளன.

குரோஷியா ஒரு வெற்றியுடனும், செக் குடியரசு வெற்றியின்றியும் முறையே அடுத்த இரு இடங்களில் இருக்கின்றன.

போட்டியின் இதர ஆட்டங்களில், ஸ்லோவேனியா - ஸ்காட்லாந்தையும் (2-1), சுவிட்ஸா்லாந்து - வடக்கு மாசிடோனியாவையும் (3-0), அல்பேனியா - சான் மரினோவையும் (2-1), பெலாரஸ் - ஃபின்லாந்தையும் (1-0), பல்கேரியா - லக்ஸம்பா்கையும் (2-0), ஸ்லோவாகியா - மால்டோவாவையும் (4-0) வென்றன. எஸ்டோனியா - ஐஸ்லாந்து ஆட்டம் டிரா (0-0) ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.