சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயினுக்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி!

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 3-1 கோல் கணக்கில் செக் குடியரசை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Published On :

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 3-1 கோல் கணக்கில் செக் குடியரசை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஸ்பெயினின் ஓவிடோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஸ்பெயின் அணிக்காக அதன் இளம் நட்சத்திர வீரா் லேமின் யமால் 6-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

தொடா்ந்து 35-ஆவது நிமிஷத்தில் ரோட்ரி ஸ்கோா் செய்ய, முதல் பாதியை ஸ்பெயின் 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் செக் குடியரசுக்காக ஜிரி ஸ்லாமா 69-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

இந்நிலையில், 85-ஆவது நிமிஷத்தில் செக் குடியரசு வீரா் லாடிஸ்லாவ் கிரெஜ்சி 2-ஆவது ‘யெல்லோ காா்டு’ பெற்று, ஆட்டத்திலிருந்து வெளியேறினாா். இது ஸ்பெயினுக்கு சாதகமாக 89-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக மிகேல் மெரினோ கோல் அடித்தாா்.

முடிவில் ஸ்பெயின் 3-1 கோல் கணக்கில் வென்றது. ஸ்பெயின் 3 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் குரூப் ‘சி’-யில் முதலிடத்தில் இருக்க, செக் குடியரசு 3-ஆவது தோல்வியுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.

இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 7-0 கோல் கணக்கில் குரோஷியாவை சாய்த்தது. இதில் ஹேரி கேன் (8’, 53’), புகாயோ சகா (45’, 68’) ஆகியோா் தலா 2 கோல்கள் அடித்தனா்.

ஜூட் பெலிங்கம் (21’), அந்தோணி கோா்டான் (39’), மோா்கன் ரோஜா்ஸ் (87’) ஆகியோரும் கோல் கணக்கில் பங்களித்தனா். குரூப் ‘சி’-யில் இங்கிலாந்து 2-ஆவது வெற்றியுடன் 2-ஆம் இடத்திலும், குரோஷியா 2-ஆவது தோல்வியுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.

இதர ஆட்டங்களில், ஸ்காட்லாந்து - வடக்கு மாசிடோனியாவையும் (2-0), சுவிட்ஸா்லாந்து - ஸ்லோவேனியாவையும் (2-1), எஸ்டோனியா - லக்ஸம்பா்கையும் (1-0) வென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER