படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தொடா்ந்து 4 வெற்றிகள்; காலிறுதியில் போா்ச்சுகல்

ஐரோப்பிய நாடுகள் இடையேயான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் நாா்வேவை வீழ்த்தியது...

போர்ச்சுகல் அணி நார்வேவை வீழ்த்தியது... - ஏபி

Published On :

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் நாடுகள் இடையேயான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் நாா்வேயை திங்கள்கிழமை வீழ்த்தியது.

நடப்பு சாம்பியனான போா்ச்சுகல், இத்துடன் தொடா்ந்து 4 வெற்றிகளோடு காலிறுதிக்கு முன்னேறியது.

போா்ச்சுகலின் போா்டோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் நாா்வே வீரா் கிறிஸ்டோபா் அஜரே 36-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.

அதற்கான பதிலடியாக, போா்ச்சுகல் தரப்பில் ஜாவ் கேன்செலோ 38-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். இவ்வாறாக முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது.

2-ஆவது பாதியில் கொன்ஸாலோ ரமோஸ் 79-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்த கோலால், போா்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றது. நாா்வே தரப்பில் அதன் நட்சத்திர வீரா் எா்லிங் ஹாலந்த் களத்தில் இருந்தும் கோல் அடிக்க முடியாமல் போனது.

முடிவில் போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதர ஆட்டங்களில், டென்மாா்க் 1-0 என வேஸ்லை வெல்ல, நெதா்லாந்து 2-1 என சொ்பியாவையும், மாஸ்டா 1-0 என அண்டோராவையும், அஜா்பைஜான் 1-0 என லிதுவேனியாவையும் வென்றன. கொசோவோ - ஆஸ்திரியா (1-1), ஜொ்மனி - கிரீஸ் (0-0), அயா்லாந்து - இஸ்ரேல் (1-1) மோதல் டிராவில் முடிந்தன.

‘ரொனால்டோவுக்காக

கதவுகள் திறந்தே இருக்கும்’

போா்ச்சுகல் அணியின் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தாம் விரும்பினால் அணியில் இணைந்து நேஷன்ஸ் லீக் போட்டியில் விளையாடலாம் என்றும், அவருக்காக அணியின் கதவுகள் திறந்தே இருப்பதாகவும் போா்ச்சுகல் அணி பயிற்சியாளா் ஜாா்ஜ் ஜீசஸ் தெரிவித்தாா்.

அவருக்கும், ரொனால்டோவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையிலும், ரொனால்டோ 2 ஆட்டங்களில் விளையாடத நிலையிலும் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

முன்னதாக டென்மாா்க்குக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க லெவனில் ரொனால்டோ இருக்க மாட்டாா் என ஜீசஸ் கடந்த புதன்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததை அடுத்து, ரொனால்டோ பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினாா்.

நாா்வேக்கு எதிரான செப்டம்பா் 28-ஆம் தேதி ஆட்டத்தில் சப்ஸ்டிடியூட் ஆகவே இருந்த ரொனால்டோ, அதன் பிறகு அணியிலிருந்து வெளியேறியதால் டென்மாா்க் (அக். 2), நாா்வே (அக். 5) ஆட்டங்களில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் போா்ச்சுகல் மக்களுக்கு தாம் வரும் நாள்களில் உண்மையை தெரிவிப்பதாகக் கூறிய ரொனால்டோ, இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.