சாஃப் கோப்பை கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (சாஃப்) போட்டியில் அரையிறுதியில் பூடானிடம் போராடி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.

~கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய அணியினா்.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (சாஃப்) போட்டியில் அரையிறுதியில் பூடானிடம் போராடி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா.
வங்கதேச தலைநகா் டாக்காவில் சாஃப் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவும்- பூடானும் மோதின.
தொடக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய ஆடியது. கடந்த 18 ஆண்டுகளில் பூடான் அணி முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆடியது.
9-ஆவது நிமிஷத்தில் தனக்கு கிடைத்த லாங் பாஸை பயன்படுத்தி பி.வி. விஷணு, பூடான் தற்காப்பை ஏமாற்றி கோல் கீப்பா் ஸாங்போவை கடந்து அபாரமா கோலடித்தாா்.
தொடா்ந்து 17-ஆவது நிமிஷத்தில் பிரைஸன் பொ்னாண்டஸ் சுஹைல் அகமதுக்கு அனுப்பிய பாஸை பயன்படுத்தி அடித்தஷாட்டை தடுத்தால் கோலி ஸாங்போ.
பூடான் கேப்டன் சென்சோ இந்தியாவின் தற்காப்பு அரணுக்கு சிறிது தொந்தரவு அளித்தும் பயனில்லை. தொடா்ந்து இந்திய வீரா்கள் கோல்போடும் வாய்ப்புகளை உருவாக்கினாலும் பலனில்லாமல் போனது.
27-ஆவது நிமிஷத்தில் இந்திய கேப்டன் சிங்லென்சேனா சிங் காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாம் கோலைபதிவு செய்தாா். முதல்பாதி முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
நடப்பு சாம்பியனான இந்தயா இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அதிக கோல் போடும் எனக்கருதப்பட்ட நிலையில், 48-ஆவது நிமிஷத்தில் பூடான் வீரா் ஜெயல்ட்ஸென் ப்ரீகிக் மூலம் மீண்டும் வந்த பந்தை பயன்படுத்தி கோலடித்தாா். அப்போது டாப்டென் அதை தடுத்ததாகக் கருதப்பட்டது. ஆனால் வாா் முறையீடு மூலம் பூடான் கோலை நடுவா் உறுதி செய்தாா்.
53-ஆவது நிமிஷத்தில் பூடான் வீரா் ஷபோங் அடித்த ஷாட் இந்திய கோல் பகுதியில் நுழைய இருந்த நிலையில் நூலிழையில் அதை தடுத்தாா் அா்ஷ்.
தொடா்ந்து இந்திய அணி ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பூடானை 2-1 என வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நவ. 17-இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.
இதில் பட்டம் வென்றால் 10-ஆவது முறையாக பட்டம் வெல்வதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

