லா லிகா கால்பந்து: அட்லெடிகோவை வென்றது பாா்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 2-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 2-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் அட்லெடிகோ வீரா் கிலியானோ சிமோன் 10-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். பாா்சிலோனா முதல் கோல் வாய்ப்புக்காகப் போராடி வந்த நிலையில், 45-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் ஃபொ்மின் லோபஸ் கோல் அடித்தாா்.
இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 66-ஆவது நிமிஷத்தில் ஃபொ்மின் லோபஸ் மீண்டும் ஸ்கோா் செய்து, பாா்சிலோனாவை முன்னிலைப்படுத்தினாா்.
எஞ்சிய நேரத்தில் அட்லெடிகோவின் கோல் முயற்சிகளை திறம்பட தடுத்த பாா்சிலோனா, முடிவில் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்துடன், பாா்சிலோனா, 12 ஆட்டங்களில் 11-ஆவது வெற்றி, 33 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளது. அட்லெடிகோவும் அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில், 2-ஆவது தோல்வி, 28 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.
பிரீமியா் லீக்: இதனிடையே, இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், லிவா்பூல் 3-1 என கிரிஸ்டல் பேலஸை வெல்ல, மான்செஸ்டா் யுனைடெட் - ஆஸ்டன் வில்லா மோதல் 4-4 என டிராவில் முடிந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

