மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்
மேக்கேதாட்டு அணை குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மீண்டும் கருத்து...

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - ANI
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது, யார் கண்டனம் தெரிவித்தாலும் கவலையில்லை என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கர்நாடகத்தில் நடந்த நிகழ்வில், பிரதமர் மோடி முன்னிலையில் டி.கே. சிவகுமார் பேசியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழக கட்சித் தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
காவிரி பிரச்னையில் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடாது என்றும் கூறினார்.
மாணிக்கம் தாகூர் பேசியதற்கு பதிலளித்த டி.கே.சிவகுமார்,
"மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியில் யார் வேண்டுமானாலும் கண்டிக்கட்டும், எனக்கு எந்த கவலையும் இல்லை. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு உரிமை உள்ளது. யாரும் இதைத் தடுக்க முடியாது. இது என்னுடைய மாநிலம், என்னுடைய உரிமை.
மாணிக்கம் தாகூருக்கு மேக்கேதாட்டு குறித்த உண்மைகள் தெரியாது. அவரை அணை கட்டும் இடத்திற்கு அழைத்துச் சென்று, தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போகும் பயன்கள் குறித்து விளக்கமளிக்க நான் தயார்.
அதேபோல தமிழக அரசின் பிரதிநிதிகளும் கர்நாடகம் வந்தால் இந்த பகுதிக்கு அந்த அணை எந்தளவுக்கு பயன் தரும் என்பதை விளக்கத் தயார்" என்று கூறியுள்ளார்.
Summary
Its my state, my right; Mekedatu is Karnatakas right: DK shivakumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


