மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி

மேக்கேதாட்டு குறித்து டி.கே. சிவகுமார் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

மேக்கேதாட்டு குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

Updated On :

குழந்தைகள் நாள் வாழ்த்து அட்டையில் நேரு படம் போட்டால்தான், நேருவை குழந்தைகளுக்குத் தெரியுமா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், மேக்கேதாட்டு குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதற்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேக்கேதாட்டுஅணை கட்டப்படும் என பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதல்வர் டி கே சிவகுமார் பேசியது ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கர்நாடக முதல்வரை நான் கண்டிக்கிறேன். நாட்டின் பிரதமர் முன்னிலையில் இது போன்று அவர் பேசியிருக்கக் கூடாது, அவர் பேசியதற்கு பிரதமர் பதில் கூறியிருக்க வேண்டும், பதில் அளிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பிரதமர், காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

தஞ்சையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், குழந்தைகள் தின விழா வாழ்த்து அட்டையில் நேரு படம் இல்லாதது குறித்து கேட்டதற்கு, அட்டையில் போட்டு தான் அவர் தெரிய வேண்டும் என இல்லை. சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, குழந்தைகள் தின விழா உள்ளிட்ட விழாக்களை சொன்னால் என்ன நியாபகம் வரும்? அது தான் முக்கியம். தமிழகத்தில் வேறு அரசு இது போல் கொண்டாடி உள்ளதா. அது தான் முக்கியம்.

தமிழக வெற்றி கழகத்தின் ஆறு மாத கால ஆட்சி திமுக ஆட்சியை விட சிறப்பாக உள்ளது. லஞ்சம் ஊழல் இல்லாமல் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் ஒழுங்காக உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஒற்றுமை இல்லை. நாம் முதலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காவிரியை‌ தடுக்கும் உரிமை பிரதமருக்கு மட்டுமே உள்ளது. எனவே அவர் கட்ட அனுமதிக்க வழங்க கூடாது. கர்நாடக பிரதமரை கண்டிப்பதாகவும்.

நேற்று மேடையில் பிரதமர் மோடி சிவக்குமாரை கண்டித்திருக்க வேண்டும். மோடியின் மெளனம்‌ பயத்தை ஏற்படுத்துகிறது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி ஒன்றாகதான் உள்ளோம். இந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தவுடன் தங்களது நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம் என்பது ஒரு நடக்காத விவகாரம் அதற்கு கண், காது, மூக்கு வைப்பது ஏற்புடையதல்ல. ஒரு நடிகைக்காக உதயநிதி பால்டாயில் குடித்துவிட்டார் என சமூக வலைதளங்களில் நான் ஒரு ட்வீட் போட்டால் அதற்கு அவர் பதில் சொல்ல முடியுமா? உதயநிதியின் தவறான அரசியலால் திமுக தொண்டர்கள் தலை குணிந்து நிற்கிறார்கள்.

திமுகவின் தோல்விக்கு உதயநிதி தான் காரணம் என அவர் தெரிவித்தார்.

Summary

Do children need to see a picture of Nehru on a Children’s Day greeting card to recognize him? asks Manickam Tagore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.