செஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டதா? மாணிக்கம் தாகூர் கேள்வி

தமிழகத்தில் நடைபெற்றுவரும் தொடர் கொலைகள் தொடர்பாக மாணிக்கம் தாகூர் பேசியது குறித்து...

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :

கடந்த திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டதா? என காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் தொடர் கொலைகள் தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களுடன் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:

''திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டதா?

காவல் துறையுடன் சண்டையிடாத காலம் முன்பு இருந்ததா? மகனின் நண்பர்களால் எஸ்.பி.யையும் டி.எஸ்.பி.யையும் மாற்றிய காலம் இருந்தது.

மு.க. ஸ்டாலின் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பேச வேண்டும். காவல் துறையினர் மாற்றத்தில் குடும்பத்தின் தலையீடு இல்லையா? அமைச்சர்களின் தலையீடுகள் இல்லையா? என்பதை அவர் திரும்பிப் பார்க்க வேண்டும்

திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டதற்கு முழு காரணம் காவல் துறையை முதல்வர் பொறுப்பில் இருந்து எடுத்துக்கொண்டதுதான். அதனை மீட்டெடுக்க வேண்டும். அந்தப் பணிகளை முதல்வர் விஜய் செய்கிறார்'' எனத் தெரிவித்தார்.

மேலும், ''கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல்கள் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய தகவல்களை அரசு சரிபார்க்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Did the police force function independently during the DMK regime Manickam Tagore asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.