தொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசு
தொடர் கொலைகளைத் தடுப்பது காவல் துறை பொறுப்பு மட்டுமல்ல; நமது பொறுப்பும்தான் என அமைச்சர் வன்னி அரசு பேசியது குறித்து...

சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு. - கோப்புப்படம்
தமிழகத்தில் நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகளை தடுப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல, நமது பொறுப்பும் தான் என சமுக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் வன்னி அரசு பேசியதாவது:
''ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பற்றது. அனைத்து உயிர்களையும் பாதுகாக்க வேண்டும். ஆணவப் படுகொலை நடப்பதை யாரும் பொருட்படுத்துவது இல்லை; அதனை சட்டம் - ஒழுங்கு கணக்கில் பார்ப்பதில்லை.
அரசியலுக்காக இத்தனை கொலைகள் நடந்துள்ளதாக கணக்கு கூறி பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். சமூக பதற்றம் தவிர்க்கப்பட வேண்டியது.
தமிழகம் முழுக்க தீபாவளி பண்டிகைக்கு கூட வீட்டிற்குச் செல்லாமல் கண்காணிப்புப் பணியில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தபோதும் இதுபோன்று நடப்பது மேலும் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய தேவையை உருவாக்குகிறது. இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
காவல் துறைக்கு மட்டுமல்ல; நமக்கும் பொறுப்பு உள்ளது. பதற்றத்தின் மூலம் படுகொலைகளை நியாயப்படுத்த முடியாது'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Massacres cannot be justified: Minister Vanni Arasu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


