சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

மதவாத பாஜக, சாதியவாத பாமகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை! வன்னி அரசு

தவெகவுடன் பாமக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் வன்னி அரசு பதில்...

vanni arasu

வன்னி அரசு - fb / vanni arasu

Published On :

சாதியவாத பாமக, மதவாத பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.

தமிழகத்தில் இடைத்தேர்தலுக்குப் பிறகு தவெக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று பரவலாக செய்திகள் வருகின்றன.

ஆனால் தவெகவுடன் பாமக கூட்டணி என்பது வதந்தி என்று பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் அதேபோல விசிக தலைவர் தொல். திருமாவளவனும் தெரிவித்திருந்தனர்.

எனினும், இந்த கூட்டணி தொடர்பாக முதல்வர் விஜய்யும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இதையடுத்து விசிக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,

"சாதியவாத பாமகவுடனும் மதவாத பாஜகவுடனும் ஒருபோதும் கூட்டணி இல்லை. இந்த நிலைப்பாட்டில் விசிக உறுதியாக இருக்கிறது. நாங்கள் இப்போதும் இந்த நிலைப்பாட்டையே தொடர்வோம். சௌமியா அன்புமணியும் இது வதந்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார்" என்று கூறினார்.

Summary

There will never be an alliance with the communal BJP or the casteist PMK: Vanni Arasu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER