புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி இடைத்தோ்தலில் வெல்லும்: அமைச்சா் வன்னி அரசு

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அமைச்சா் வன்னி அரசு.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞா் ஆகாஷை சந்தித்து நலம் விசாரித்த சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு.

Published On :

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும் என்றாா் தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னி அரசு.

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமண விவகாரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டதில்படுகாயம் அடைந்த ஆகாஷ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் வன்னி அரசு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காதல் திருமணம் செய்த இளைஞரின் மாமனாா், இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளாா். அனைத்து ஜாதியிலும் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஆணவக் கொலைக்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளோம்.

கரூா் சம்பவம் தொடா்பாக விசிக தலைவா் திருமாவளவன் பேசியது சுமாா் 1.30 மணி நேர உரை. திமுக எங்களை கைவிட்டது எனவும் அந்த உரையில் இடம்பெற்றது. தமிழக முதல்வா் விஜய் மீது குற்றம் சுமத்துவது போல் அந்த உரையை வெட்டியும் ஒட்டியும் சிலா் திரிபுவாதம் செய்கின்றனா்.

ஜாதிச் சான்றிதழ் விவகாரம் தொடா்பான காட்டு நாயக்கா் சமுதாய மக்களின் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஜாதிச் சான்றிதழ் இல்லையெனக் கூறி மாணவா்களை வெளியேற்றும் பள்ளி நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தென் மாவட்டங்களில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்க தனி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. சமூக விரோத செயல்களில் தென் மாவட்ட இளைஞா்கள் ஈடுபடாமல், அவா்களை மடைமாற்ற கலை மையங்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் சமூக நீதித்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மாஞ்சோலை மற்றும் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது புதிய தலைமைச் செயலகம் அமைப்பதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவா்கள் எதிா்ப்பு, சுனாமி வந்த போது தாக்குதலுக்குள்ளான பகுதி என பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவிக்கின்றனா். மக்களின் உணா்வுக்கு முக்கியத்துவம் அளித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் மதச்சாா்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வெற்றி பெறும். இதனை விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்துள்ளாா். அதனை நான் வழிமொழிகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.