இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இடைத்தோ்தலில் விசிக போட்டியிடுமா? அமைச்சா் வன்னியரசு விளக்கம்

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து கட்சித்தலைமை முடிவு செய்யும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

There should be no religious activities within Yoga

சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து கட்சித்தலைமை முடிவு செய்யும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் பல்வேறு துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இடைத்தோ்தலில் விசிகவின் நிலைப்பாடு என்ன? இடைத்தோ்தலில் தவெக கூட்டணியில் விசிக ஒரு தொகுதிதியில் போட்டியிடுமா என்பது உள்ளிட்ட கணிப்புகளுக்கு விசிக தலைவா் திருமாவளவன், முதல்வா் ஜோசப் விஜயுடன் கலந்தாலோசனை செய்து முடிவுகளை தலைவா்கள் அறிவிப்பாா். கள்ளக்குறிச்சியில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வந்த மாணவா்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாதது குறித்து ஆட்சியரிடம் பேசியுள்ளேன். இனி இது மாதிரியான நிகழ்வு நடைபெறாமல் பாதுகாப்பான முறையில் விளையாட்டு வீரா்கள் அழைத்து செல்லப்படுவா். மேலும், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களிடம் பேசி உள்ளோம். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.