முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!
தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி குறித்து ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் பேச்சு...

தமிழக முதல்வர் விஜய் உடன் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் - கோப்புப் படம்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்றும் தொடரும் என ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று (செப். 9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் மூலம் தவெக தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி இன்றுபோல் என்றும் தொடரும் என ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
”தவெக கூட்டணியில் இணைந்துள்ள அனைத்து தலைவர்களையும் அழைத்து முதல்வர் விஜய் ஆட்சியின் சிறப்பு குறித்தும், ஊழல் இல்லாத ஆட்சியைத் தொடர்வது குறித்தும் மிகவும் விமர்சையாகப் பேசப்பட்டது.
இதுவரை தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது இல்லை. முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணி அமைச்சரவை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு இன்று பிறந்திருக்கிறது.
இந்த வரலாறு சமீபகாலத்துடன் நின்றுவிடாது. இந்த வரலாறு இப்போது போல் என்றும் தொடரும். அப்படி தொடர்ந்து வரும் காலங்களில் உள்ளாட்சி, இடைத்தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தவெக தலைமையில் இணைந்து செயல்பட்டு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தருவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வருங்காலத்தில் உலகமே பாராட்டக் கூடிய வரலாற்றை படைக்கும். தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான். இது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
IUML leader Kader Mohideen has stated that the 'Secular Social Justice Victory Alliance' led by TN CM Vijay will continue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





