நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம்

தலைமைச் செயலகம்

Published On :

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம், சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியான போதே, பல்வேறு தரவுகளுடன் பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். பட்டினப்பாக்கம் மீனவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அரசாணை வெளியாகியிருக்கிறது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தாா்.

எனினும், எந்த இடத்தில் அமையும் என்பதை அவா் அப்போது அறிவிக்கவில்லை. முதற்கட்டமாக சென்னை பட்டினப்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இடங்கள் இதற்கான பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர், பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மாலை முதல்வா் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுப்பணித் துறை, வருவாய், நகராட்சி நிா்வாகம், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இதில் புதிய சட்டப்பேரவை வளாகத்துக்கான இடத்தைத் தோ்வு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்துக்குப் பிறகு பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதன் அடிப்படையில், பட்டினப்பாக்கம் நல்ல தெரிவு அல்ல என்று அன்புமணி அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.