10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

ரூ. 1,200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!!

சென்னையில் ரூ. 1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதைப் பற்றி...

முதல்வர் விஜய் - தலைமைச் செயலகம்.

Published On :3 செப்டம்பர் 2026, 11:38 am IST

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் விஜய், 110 விதியின் கீழ், புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசும்போது, “புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் கடந்த கி.பி. 1640 ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1644 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1652 ஆம் ஆண்டில் சென்னை மாகாண நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அரசில் அதிகாரபூர்வத் தலைமையிடமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும் மாநிலத்தின் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது.

சுமார் 107 ஏக்கர் பரப்பரளவைக் கொண்ட இந்த வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பயன்பாட்டுக்காக வெறும் 4 ஏக்கர் மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்தியக் கட்டுப்பாடு மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை. தற்போது தலைமைச் செயலகம் இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.

தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் இருப்பிடமாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் சட்டப்பேரவை, முதல்வர், அமைச்சர் மற்றும் தலைமைச் செயலர் அறைகள், நிதித்துறை மற்றும் பிற முக்கியத் துறைகள் அங்கு செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வளாகம் 2 லட்சத்து 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மாநில அரசின் விரிந்து வரும் நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் நமது நாமக்கல் கவிஞர் மாளிகை 1978 ஆம் ஆண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அரசு செயலர்கள், அலுவலர்கள், 6,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக நிர்வாக நலனைக் கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

ஆனால், பின்னர் அக்கட்டடமானது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடந்த நாற்பது ஆண்டு காலங்களில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசு துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கையும் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன.

இருப்பினும், தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்க நிலையை அடைந்துள்ளன. புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள மீதமுள்ள இடங்கள் இந்திய கட்டுப்பாடு மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், கூடுதல் கட்டடங்களுக்கு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை.

புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும் தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும் திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலகத் தரத்திலான பொது நிர்வாக உள் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமை செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது.

புதிய தலைமை செயலக கட்டடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உள்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரிய கட்டடங்களை வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாத்து அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்கால தலைமுறைகளுக்கும் அறியும் வகையில் உருவாக்கப்படும்.

இவற்றை கருத்தில் கொண்டு, அடுத்த நூற்றாண்டுகளில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படும்” என்றும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Summary

Chief Minister Vijay has announced that a new Secretariat will be constructed in Chennai, spanning an area of ​​20 lakh square feet at a cost of ₹1,200 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.