/

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலகம் இடமாற்றம்! எங்கு தெரியுமா?

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை இட மாற்றம் செய்யப்படுவது குறித்து...

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 11:32 am IST

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு இட மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில்தான் முதல்வரின் அலுவலகம் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக, முதல்வரின் அலுவலகம் இட மாற்றம் செய்யப்படவுள்ளது.

தற்போது, தலைமைச் செயலகத்தின் முதன்மைக் கட்டடத்தில் இயங்கி வரும் முதல்வர் அலுவலக அறையை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இட நெருக்கடி காரணமாகவும், பொது மக்களின் வருகை அதிகரிப்பைக் கருத்தில்கொண்டும் முதல்வரின் அலுவலக அறையை இட மாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி, 10 அடுக்குமாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் விஜய்யின் அலுவலக அறை, அவரது செயலாளர்கள் 4 பேரின் அறைகள் அனைத்தும் 10-ஆவது மாடியில் அமையவிருக்கிறது. இந்தத் தளத்திலிருந்து கடலின் அழகை ரசிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகை

நாமக்கல் கவிஞர் மாளிகை - ENS

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-ஆவது தளத்தில் பெரிய மாநாடு கூடம் மற்றும் உணவகப் பகுதியை முதல்வரின் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.

முதல்வரின் அலுவலக அறை மாற்றப்படும் இந்தத் தளத்தில் ஏற்கெனவே இயங்கி வரும் தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, வணிக வரித் துறையின் சில பிரிவுகளும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் முதல்வரின் அலுவலக அறை இட மாற்றம் முடிவடைந்து விடும் எனக் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர்களிலேயே பாரம்பரிய அலுவலகக் கட்டடத்திலிருந்து புதிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றும் முதல் முதல்வர் விஜய்தான்.

Summary

Tamil Nadu CM Vijay moves office to Namakkal Kavignar Maaligai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.